
சபாநாயகர்
கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க உத்தேசித்துள்ள தரப்பினர்
ஜே.வி.பி.யின் ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமரிடம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சஜித் தரப்பினரும் ஜே.வி.பி.யின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளனர்.
இது
தொடர்பில் உதவியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சஜித் தரப்பு
பிரதிநிதியொருவர் ஜே.வி.பி அரசியல் பீட உறுப்பினர் ஒருவரை சந்தித்துள்ளார். இதன்
போது தமது தோழர்கள் 60, 000 பேரை கொன்று குவித்த பிரேமதாசவின்
புதல்வருக்கு ஆதரவு வழங்குவதா அந்தப் பேச்சுக்கே இடமில்லை என
குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த முயற்சி எடுத்த எடுப்பிலேயே தோல்வியில் முடிவடைந்துள்ளது என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment