சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்துக்கு "அன்மைய பாடசாலை சிறந்த
பாடசாலை (NSBS)" திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட 3 மாடிக் கட்டிடம், நிர்மானப்
பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனை மீண்டும்
அப்பாடசாலைக்கு வழங்கக் கோரி மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில்
ஈடுபட்டமையால், கடந்ந வாரம் சாய்ந்தமருது கோட்டத்துக்குட்பட்ட 8
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக
ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இந்த விவகாரமாக சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்ஆ
பள்ளிவாசல் தலைமையில், சாய்ந்தமருதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை
மாநகர சபை உறுப்பினர்கள், புத்தி ஜீவிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள்
உள்ளிட்ட குழு, மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் வழிகாட்டலில்
இன்று (16) காலை கிழக்கு மாகாண பிரதம செயலாளர், முதலமைச்சின் செயலாளர்,
கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செலாளர்
ஆகியோருடன் 4 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, இடைநிறுத்தப்பட
நிர்மானப் பணிகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
0 comments:
Post a Comment