திருகோணமலை சண்முக தேசிய பாடசாலையில் மீண்டும் அபாயா அணிந்து வர முடியாதென்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த இருவாரங்களுக்கு முன்னர் கல்விக் கல்லூாி டிப்ளோமாதாாிகளுக்கு ஆசிாியர் நியமனம் வழங்கப்பட்டது. அதன்படி திருகோணமலை சண்முகா தேசிய பாடசாலைக்கு 03 முஸ்லிம் பெண் ஆசிாியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
இம்மூன்று பெண் ஆசிாியைகளும் கடந்த 20ஆம் திகதி மேற்படி பாடசாலைக்குச் சென்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இவ்வாசிாியைகள் அன்றைய தினம் அபாயா அணிந்து சென்றுள்ளார்கள். இந்நிலையில் பாடசாலையின் அதிபர் நாளை முதல் அபாயா அணியாது சாாி அணிந்து கொண்டு வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் உங்குளுக்கு பாட நேரசூசி வழங்கப்படும். இல்லையாயின் ஆசிாியைகளின் ஓய்வு அறையில் இருக்கலாமென்று அதிபாினால் தொிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை சண்முக தேசிய பாடசாலை தொடர்ந்தும் முஸ்லிம் ஆசிாியைகளின் மனித உாிமையை மீறிக் கொண்டிருப்பதனை கல்வி அமைச்சு அங்கிகாித்துக் கொண்டிருக்க முடியாது. நாட்டில் அவசர காலச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட முகத்தை மறைக்கும் நிஹாப், புர்கா ஆகியவற்றிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் நீக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் ஆசிாியைகள் தமது மதவிழுமியத்தைப் பின்பற்றும் வகையில் அபாயா அணிவதற்கு திருகோணமலை சண்முக தேசிய பாடசாலை தடைகளைப் போடுவது நாட்டின் சட்டத்திற்கு விடும் சவாலாகும். மட்டுமன்றி கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு மாற்றமானதொரு நடவடிக்கையுமாகும்.
தங்களை பாடசாலையின் அதிபர் அபாயா அணிந்து கொண்டு வரக் கூடாதென்று உத்தரவிட்டமை குறித்து பாதிக்கப்பட்ட 03 ஆசிாியைகளும் கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
கடந்த 2018 ஏப்ரல் 26ஆம் திகதி 05 முஸ்லிம் ஆசிாியைகளை அபாயா அணியக் கூடாது. சாாி அணிய வேண்டுமென்று அதிபரும், பாடசாலை நிர்வாகமும் கட்டாயப்படுத்தி போது பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டன. இது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அவ்வாசிாியைகள் தற்காலிக இடமாற்றம் பெற்று வேறு பாடசாலைக்குச் சென்றார்கள். குறிப்பிட்ட 05 ஆசிாியைகளுக்கும் நிரந்தரத் தீர்வு ஒன்றினை வழங்காத நிலையில் மீண்டும் 03 முஸ்லிம் ஆசிாியைகள் அபாயா அணிந்து வர முடியாதென்று அதிபாினால் தொிவிக்கப்பட்டு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை சண்முக தேசிய பாடசாலையின் இந்த செயற்பாட்டை இனரீதியான ஒதுக்கல் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது. மட்டுமல்லாது அடுத்த சமூகத்தின் கலாசாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாதொரு மனநிலை அப்பாடசாலையில் வளர்க்கப்பட்டுள்ளது. இதனால், இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களும் இத்தகையைதொரு மனோ நிலைக்கு வளர்க்கப்படும் சூழலை பாடசாலையே உருவாக்கியுள்ளமை குறித்து கல்வி அமைச்சு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
0 comments:
Post a Comment