நிந்தவூர் மாந்தோட்ட சந்தியிலும், அலியான்ட சந்தி மற்றும் நிந்தவூர்
மக்கள் வங்கிக்கு முன்பாக அங்காடி வியாபாரங்களில் ஈடுபட்டோரை இன்று (20)
வெள்ளிக்கிழமைக்குள் நிந்தவூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்டுள்ள பொதுச்
சந்தையில் தமது வியாபாரங்களை தொடங்குமாறு நிந்தவூர் பிரதேச சபையினால்
விடுக்கப்பட்டடுள்ள அறிவித்தலையடுத்து இன்று சகல மீன் வியாபாரிகளும்
தத்தமது தற்காலிய கொட்டில்கள், வியாபார பொருட்களை அகற்றிச் சென்றுள்ளனர்.
இதனால் இன்று மாந்தோட்ட சந்தி மற்று நிந்தவூர் பிரதான வீதியில் அமைத்த
தற்காலிய வியாபார இடங்கள் வெறிச்சோடிக் கிடப்பதை காணக்கூடியதாகவுள்ளது.
குறிப்பு:. வியாபாரிகள் நிந்தவூர் பொதுச் சந்தையில் தமது விபாரங்களை தொடங்குவதை விரும்பாது நிந்தவூர் வைத்தியசாலை வீதி கடற்கரை சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள சந்தையிலேயே தமது வியாபாரங்களை தொடங்குவதற்கு விரும்புகின்றதாக அங்குள்ள வியாபாரிகள் சிலர் கூறுகின்றனர்.
இதே வேளை, எக்காரணம் கொண்டு பொதுச் சந்தை தவிர்ந்த அனுமதி பெறாத எந்தவொரு இடத்திலும் மீன் வியாபாரமோ அல்லது வேறு வியாபாரமோ செய்ய முடியாதென்று பிரதேச சபை அறிவித்துள்ளது.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.
நிந்தவூர்.
0 comments:
Post a Comment