தடுக்கமுடியாத நிலைமைகள் ஏற்படும்போது அதனை கட்டுப்படுத்துவதற்காகவே
நாடு முழுவதும் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக
பாதுகாப்பு செயலர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டில் இராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும் என்று அச்சம் அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்
ரீதியான மோதல்கள் ஏற்படும்போது அவற்றை கட்டுப்படுத்துமாறு
காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இன்று மிஹிந்தலையில்
செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment