முன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி
ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது
அவர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது போினவாதக் கட்சி ஒன்றின் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொிவித்துள்ளது.
புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர் அலி சப்ரி அவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர் அலி சப்ரி அவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் ரயர்கள் எரிக்கப்பட்ட நிலை இருந்ததால் வாகனங்களை திருப்பி மெதுவாக வரும்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது. றிசாட் பதியூதீனை குறி வைத்து தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், அவனை அவருடன் வந்த குழுவினர் தடுத்து நிறுத்தியாகவும் தொிவிக்கப்படுகின்றது.
இதே வேளை, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த வந்த பொலிஸார் உடனடியாக பாதுகாப்பை உறுதிப் படுத்தியுள்ளனர் .
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் தலைமையிலான குழுவினர் மக்கள சந்திப்புக்காக சென்ற போதே இத்தாக்குதல் நடைபெற்றதாக தொிவிக்கப்படுகின்றது.
இத்தகைய தாக்குதல் நடவடிக்கைகள் ஜனநாயக செயற்பாடுகளுக்கு எதிரான ஒன்றாகும். இதனை தாமட வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் றிசாட் பதியூதின் தொிவித்தார்.



0 comments:
Post a Comment