எம்.எஸ். -
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான முன் ஏற்பாடுகளை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மேற்கொண்டுள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோரனா வைரஸ் மூலமாக பரவும் தொற்று நோய் சுவாசிப்பதன் மூலமாகவே ஏற்படுகின்றது. இந்நோயின் அறிகுறிகளில் ஒன்றாக காய்ச்சல் இருக்கின்றது. இதனால், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளிகளில் இருந்து காய்ச்சல் உள்ளவர்களை அடையாளங் கண்டு அவர்களிடம் கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக தனியான கருமபீடமொன்றினையும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதே வேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முகத் திரையை பயன்படுத்துமாறு வைத்தியர்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால், முகத்திரைகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. ருபா 20 இற்கு விற்கப்பட்ட முகத்திரை ரூபா 80 வரை விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். தற்போது தனியார் மருந்தகங்களில் முகத்திரையே அதிகம் விற்கப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

0 comments:
Post a Comment