• Latest News

    January 31, 2020

    ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மறைவுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை

    சப்ராஸ் மன்சூர்
    (அஸ்லம் எஸ்.மௌலானா)
    சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மறைவுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றபோது மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் இந்த அனுதாபப் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

    அவர் தனதுரையில் தெரிவித்ததாவது;

    "சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் இழப்பானது கல்முனை பிராந்தியத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்தினருக்கும் பேரிழப்பாகும். சமூக சேவைகளில் தன்னை அர்ப்பணித்த இவரது பணிகள் காலத்தால் அழியாதவையாகும்.

    சிறுபான்மை மக்களின் பலம் கல்வியேயாகும் என்ற உறுதியுடன் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அளப்பரிய சேவையாற்றி வந்த மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்கள் பல இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமைக்குரிய ஒலிபரப்பாளராவார்" என்றார்.

    இந்த அனுதாபப் பிரேரணை மீது முதல்வர் ஏ.எம்.றகீப் உட்பட மற்றும் பல உறுப்பினர்களும் உரையாற்றினர். மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் அறிவு, ஆற்றல், சமூக, கல்வி, மற்றும் ஊடகத்துறைக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து நினைவுகூர்ந்து உரையாற்றினர்.

    இந்த அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்குமாறு சபைச் செயலாளரை முதல்வர் பணித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மறைவுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top