• Latest News

    March 30, 2020

    4 மாத வயது குழந்தை உள்ளிட்டஇ ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

    நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 5 பேர் சிலாபத்தை சேர்ந்த ஒரே குடும்பைத்தை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

    அவர்களில் 4 மாத வயதுடைய கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார் 

    இதேவேளை, கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

    இதேவேளை, இன்றைய தினம் மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது. 

    அதன்படி, 14 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    தற்போது , அங்கொடை ஐடிஎச், வெலிகந்த மற்றும் மின்னேரியா ஆகிய வைத்தியசாலைகளில் 107 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    மேலும் நாட்டின் பல வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 104 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 4 மாத வயது குழந்தை உள்ளிட்டஇ ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top