• Latest News

    March 30, 2020

    வல்லவனுக்கு (அமெரிக்கா) வல்லவன் (சீனா) வையகத்தில் உண்டு

    சீனாதான் கொரனாவை உலகத்திற்கு வழங்கியது அதாவது பரப்பியது என்ற பிரச்சாரத்தை தற்போது அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் செய்து வருகின்றது.

    உலக அளவில் கொரனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகு சீனா மீது நேட்டோ நாடுகளில் நடவடிக்கைகள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது அது பொருளாதார தடையாக இருக்கலாம் அல்லது போராககூட இருக்கலாம்
    தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றார்.

    ஆனால் இவற்றுக்கெல்லாம் இந்த நாடுகளுக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்றால் இல்லை எனலாம் காலம் காலமாக ஆப்பிரிக்காவில் மனிதர்களின்மீது பல நோய்களை பரப்பி தங்கள் மருந்துகளை சோதித்து பார்த்தவர்கள் இவர்கள் அதற்கு இவர்கள் கூறிக்கொண்ட பெயர் ஆப்பிரிக்க மக்களுக்கு மருத்துவ சேவை செய்கின்றோம் என்பதாகும் சோமாலியாவும் எத்தியோபியாவும் அவர்களது வேட்டை காடுகளாக இருந்துவந்தது செயற்கையாக பஞ்சத்தை இவர்கள் உருவாக்கினார்கள் தங்களது நாட்டு அணு கழிவுகளையும் மருத்துவ கழிவுகளையும் அந்த நாடுகளில் கடலில் கலந்து அங்கு மீன் வளம் இல்லாமல் ஆக்கினர்.

    இது போதாது என்று உள்நாட்டு யுத்தத்தை தூண்டி ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்து உள்நாட்டுக் கலவரம் தொடர்ந்து இருக்கும்படி பார்த்துக்கொண்டனர் அப்போதுதான் ஆப்பிரிக்க நாடுகளில் செல்வ வளத்தை சுரண்ட முடியும் என்பதால் தங்கமும் வைரமும் விலையும் ஆப்பிரிக்க நாடுகள் இன்று வரை பிச்சைக்கார நாடுகளாகவே இருப்பதற்கு இந்த முதலாளித்துவ நாடுகள் முக்கிய காரணமாகும் இது பல ஆப்பிரிக்க நாடுகளில் நடந்தது தற்போதும் நடந்து வருகின்றது.

    இந்த அமெரிக்க ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் எதை உலகத்திற்கு தந்ததோ தற்போது அதை இவர்களது வில்லன் நாடான சீனா தர ஆரம்பித்துள்ளது கட்டுக்கடங்காத மரணத்தை ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வருவது அவர்களுக்கு மிகவும் அவமானமாகவும் இருக்கின்றது.

    நாங்களே மருத்துவ ஜாம்பவான்கள் ஆங்கில மருத்துவத்தால் நாங்கள் எதை வேண்டுமானாலும் சாதிப்போம் என்று மார்தட்டி வந்த இந்த நாடுகள் கோரனாவிற்கு மருந்தை கண்டுபிடிக்க இயலாமல் தங்களது இயலாமையில் சிக்கி சீரழிந்து வருகின்றது.

    வழக்கமாக வைரஸ்களில் டிஎன்ஏ இருக்கும் ஆனால் இந்த கொரனா வைரஸில் டீஎன்ஏ இல்லை இதை உருவாக்கியதாக சந்தேக பட படும் சீனா அந்த அளவிற்கு டெக்னிக்காக உருவாக்கியுள்ளது இதனால்தான் கொரனாவிற்க்கு எதிர்ப்பு மருந்துகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதில் ஆச்சரியம் என்னவென்றால் சீனா தற்போது கொரானா வைரஸிலிருந்து மீண்டுவிட்டது வூஹான் மாநிலத்தில் போக்குவரத்து தொடங்கிவிட்டது வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பார்கள் அந்தப் பழமொழி அமெரிக்காவிற்கு வல்லவன் சீனாவோ என நம்மை சிந்திக்க வைக்கின்றது.
     Mylai Kamarudeen

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வல்லவனுக்கு (அமெரிக்கா) வல்லவன் (சீனா) வையகத்தில் உண்டு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top