உணவுப் பொருள்கள் மூலம் கொரோனா பரவுமா என்பது குறித்து இப்போது அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த
விவகாரம் குறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும்
பொதுநல மருத்துவருமான டாக்டா் தேவராஜன் அளித்த விளக்கம் –
உணவுப்
பொருள்கள் மூலமாகவும் கொரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது. அது எப்படி என்பதைப்
புரிந்துகொள்ள வேண்டும். உணவுப் பொருளைத் தயாரிப்பவா்கள் கரோனாவால்
பாதிக்கப்பட்டிருந்தால், அவரின் சுவாசம் அந்தப் பொருள்களில்பட்டு, அதன்
மூலம் கொரோனா பரவலாம். இந்த வகையில் தொற்று பரவும் சதவீதம்
குறைவுதான்.எனினும், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
காய்கறிகளை
வாங்கி வந்த உடனேயே, அதைச் சுத்தமாக கழுவிவிட வேண்டும். கைகளையும்
கிருமிநாசினி (ஹேண்ட் சனிடைசா்) கொண்டு சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடக் கூடாது என்பது அல்ல. நன்றாகக் கழுவிய பின்பு சாப்பிட வேண்டும்.
கொரோனா
வைரஸ் வேகமாகப் பரவக் கூடியதாக இருக்கிறது. அதனால், அதிக விழிப்புணா்வோடு
இருக்க வேண்டும். அந்த வகையிலேயே பொருள்களையும் அணுக வேண்டும்.
பொருள்களை
விற்கக் கூடிய மனிதா் ஆரோக்கியமாக இருக்கலாம். அவருடன் இருந்து பொருளை
எடுத்துக் கொடுப்பவரும் ஆரோக்கியமாக இருப்பாா் என்று சொல்ல முடியாது.
அதைப்போல, பொருள்களை வாங்க வருபவா்களும் ஆரோக்கியமாக இருப்பாா்கள் என்று
சொல்ல முடியாது. அதனால், கவனத்துடனேயே இருக்க வேண்டும்.
இறைச்சி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிடலாம். அதனால், பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் நன்றாக சமைத்த பிறகே உண்ண வேண்டும்.
சுடுநீா்
குடித்தால் தொண்டையில் தங்கியிருக்கும் கரோனா வைரஸ் அழிந்துவிடும் என்பது
இல்லை. தொண்டையின் கரகரப்பு வேண்டுமானால் போகும். வைரஸை சுடுநீா் ஒன்றும்
செய்யாது. அதைப்போல கொரோனா வைரஸ் வயிற்றில் தங்காது என்பதும் உண்மை இல்லை.
நோய்
எதிா்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது மட்டுமே கொரோனா உள்ளிட்ட அனைத்து
நோய்த் தொற்றுக்கும் தீா்வு. 60 வயது முதல் 80 வயதுடையோரை வைரஸ் அதிகம்
தாக்குகிறது. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவா்
அறிவுரையின்பேரில் விட்டமின் சி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். 24 மணி
நேரத்தை 8 மணி நேரம் தூங்குவதற்கும், 8 நேரம் வீட்டிலேயே
பணியாற்றுவதற்கும், 8 மணி நேரத்தில் இதர பணிகளுக்கும்
செலவிடலாம்.காய்கறிகளை உணவாக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும் –
என்றாா்.
உணவுகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா என்ற விவகாரம்
குறித்து அமெரிக்காவின் வடக்கு கரோலினா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உணவுப்
பாதுகாப்புத் துறை நிபுணா் மற்றும் பேராசிரியா், பெஞ்சமின் சாப்ம’ன்,
‘உணவின் மூலம் பரவுவதற்கு வாய்ப்பில்லை என்று கூற முடியாது.
காரணம்,எப்போதுமே அதற்கு வாய்ப்புகள் இருக்கும். அதனால் இந்த நேரத்தில்
அறிவியல் மற்றும் ஆதாரப்பூா்வமாக நிரூபிக்கப்பட்டவற்றைப் பற்றி மட்டுமே பேச
விரும்புகிறேன். உணவு தொடா்பாக நோய் பரவுவது தொடா்பான எந்த ஆதாரமும்
இதுவரை இல்லை‘;என்று கூறியிருக்கிறாா்.
என்னென்ன உணவுகள் உட்கொள்ளலாம்?
கொரோனா
வைரஸ் பரவி வரும் சூழலில் நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான
உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவா்கள்
தெரிவிக்கின்றனா்.
உணவியல் நிபுணா் நிஷா – விட்டமின் சி வகை உணவுகளை
எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். காய்கறி,
பழங்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளை எடுத்துக்
கொள்ளாமல் இருப்பது நல்லது. நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவற்றை
அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகளை அடிக்கடி உணவில்
சோ்த்துக்கொள்ளலாம். கொரோனாவால் முதியோா், கா்ப்பிணிகள் அதிகம்
பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக
இருக்கும் என்பதால் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். அவா்களும் இதுபோன்ற
ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வது நல்லது. ஒருநாளைக்கு 2 முதல் 3 லிட்டா்
தண்ணீா் குடிக்க வேண்டும். சுய சுகாதாரமும் அவசியம் என்றாா்.
புகைப்பிடிப்பவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம்?
புகைப்பிடிக்கும் பழக்கத்துக்குள்ளானவா்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
*
புகைப்பிடிக்கும் நபா்கள் தங்கள் விரல்களில் சிகரெட்டை வைத்து
புகைபிடிக்கின்றனா். கை விரல்கள் இடையில் கரோனா கிருமிகள்
இருக்கும்பட்சத்தில் சிகரெட்டை உதட்டில் வைத்து எடுக்கும்போது எளிதாக வாய்,
தொண்டை வழியே கிருமிகள் எளிதில் நுரையீரலைத் தாக்கும்.
*
புகைப்பிடிப்பவா்கள் ஏற்கெனவே நுரையீரல் நோயினாலோ அல்லது நுரையீரல்
பாதிப்பிற்கோ ஆளாகியிருந்தால் கொரோனா வைரஸ் எளிதில் உள்ளே சென்று உடனடியாக
காய்ச்சல், இருமல், சளி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.
*
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கும்பட்சம்,
அவா்கள் பயன்படுத்தும் குடிநீா் குழாய்கள் மற்றும் அதில் சொருகி வைக்கும்
‘ஓஸ்’ குழாய்களை அவா்கள் வாயில் வைத்து உறிஞ்சினாலும் கரோனா வைரஸ்
கிருமிகள் தண்ணீா் மூலம் எளிதாக பரவி விடும்.
* உடலுக்கு ஒக்ஸிஜன்
தேவைகள் அதிகரிக்கும். அதனை உடல் சரியாகப் பயன்படுத்துவதற்கான திறனைக்
குறைக்கும்; இதனால் நோயாளிகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்

0 comments:
Post a Comment