• Latest News

    March 31, 2020

    அலி சப்றிக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டது. கேள்வி எழுப்பும் திராணியுள்ளதா..?

    கொரோனா தொற்றின் காரணமாக இலங்கையில் முஸ்லிமொருவர் மரணித்தால் உரிய முறையில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி அலி சப்றி முஸ்லிம் சமூகத்திற்கே வாக்குறுதியளிந்திருந்தார். அதனை றிஷ்வி முப்தியிடம் உறுதியும் செய்யுமிருந்தார். உலக சுகாதார ஸ்தாபன ( WHO ) கோவை மற்றும் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள சுகாதார முறையிலும் அடக்கம் செய்யும் முறை உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருந்தும் நேற்று மரணித்த முஸ்லிம் சகோதரரின் ஜனாஸா அவசர அவசரமாக எரிக்கப்பட்டுள்ளது. அரசே அடக்க அனுமதித்து எரித்துள்ளதென்றால் இதன் நோக்கமென்ன?

    அலி சப்றியின் உறுதி மொழி எங்கே? அலி சப்றியின் உறுதி மொழியை நம்பிய முஸ்லிம் சமூகம் "ஆ" வென வாயை பிளந்து நம்பிக்கொண்டிருந்தது. இது தொடர்பில் அதிகம் கரிசனை காட்டிய அகில ஜம்மியதுல் உலமாவும் தனது முயற்சியை கைவிட்டது. நேற்று இரவு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வெளியிட்ட அறிக்கையில் கூட 6 அடிக்கு கப்றுகளை வெட்டி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. மையவாடிகளும் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இது அலி சப்றியின் வாக்குறுதியை இறுதி வரை அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவும் நம்பிக்கொண்டிருந்தது என்பதை தெளிவு செய்கிறது.

    நேற்று ஜனாஸா எரியூட்டபட்ட பின்பே மீண்டும் முஸ்லிம் சமூகம் விழித்தது. இதன் மூலம் அலி சப்றி முஸ்லிம் சமூகத்திடம் வழங்கிய வாக்குறுதி, அலி சப்றிக்கு அரசின் உயர் மட்டம் வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டுள்ளது. இவ் வாக்குறுதிகளானது முஸ்லிம் சமூகத்தின் முயற்சியையும் குறைத்திருந்தது. இதற்கான முழுப் பொறுப்பையும் அலி சப்றி ஏற்றேயாக வேண்டும்.

    அலி சப்றியும் ஏதோ எம் சமூக நன்மைக்காக தானே இதில் தலையிட்டார் என்ற கோணத்திலும் இதனை பார்க்க தவறி விடக் கூடாது. அவர் நல்லது செய்ய நினைத்தார், அது இப்படி போய்விட்டது என வைத்துக்கொள்வோம். இதனை எதிர்த்து அலி சப்றியால் ஒரு வார்த்தையேனும் பேச முடியுமா? அவரால் பேச முடியாது. பேசினால் தேசியப் பட்டியல் கிடைக்காது. இதுவே அவர்களின் நிலை. இவ்வாறு ஒரு கட்சியின் அடிமை போன்று செயற்படுபவர்களால் சமூகம் எவ்வித நன்மையையும் பெற முடியாது.

    இது அரசியல் பேசும் நேரமல்ல என்பதை நாமறிவோம். நீங்கள் அடக்கம் செய்ய அனுமதி பெற்று வந்து, சமூக வலைத்தளங்களிலிட்டு அரசியல் செய்த போது நாங்களும் உளமாற பிராத்தித்தோம். இன்று அது இல்லையெனும் போதே கேள்வி எழுப்புகிறோம்.

    துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
    சம்மாந்துறை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அலி சப்றிக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டது. கேள்வி எழுப்பும் திராணியுள்ளதா..? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top