கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு ஐக்கிய மக்கள்
சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்
தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதிக்கும்
இடையில் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே சஜித் இந்த கோரிக்கை
விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் எந்த எண்ணமும் தனக்கில்லை எனக் கூறியதாக
இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சர் விமல் வீரவங்ச
கூறியுள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதை தவிர வேறு எந்த
சட்ட காரணங்களுக்காகவும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டியதில்லை என
தெரிவித்துள்ள ஜனாதிபதி, தற்போது அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் எந்த
தேவையும் தமக்கில்லை என கூறியதாகவும் அமைச்சர் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment