பனாமாவின்
அமல்படுத்தப்பட்ட பாலினம் அடிப்படையிலான தனிமைப்படுத்தும் நடவடிக்கையை
பெருவும் அமல்படுத்தியுள்ளது. ஆண்களும் பெண்களும் ஒரு நாள் இடைவெளி விட்டு
வீட்டை விட்டு வெளியேறலாம்.
அதாவது ஆண்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளியிலும் பெண்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் வெளியே வரலாம்.
ஞாயிறன்று யாருக்கும் அனுமதி கிடையாது.
பெருவில் இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில்
அதிபர் சயீர் போல்சனாரூ கூறுகையில் இரண்டு அல்லது மூன்று மாத முடக்கம்
மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பின்மையை உருவாக்கும் என கூறியுள்ளார்.
பிரேசில் மக்களை மாநில அரசுகள் விதித்த முடக்க சட்டத்தைக் கடைப்பிடிக்காமல் இருக்கக் கூறுவதாக அவர் பெரிதும் விமர்சிக்கப்படுகிறார்.
இதே
சமயம் பிரேசிலில் முதல் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது ஜனவரி
மாதத்தில் என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகிறது.
இதுவரை பிரேசிலில் 8000 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதில் 327 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19
காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அர்ஜெண்டினாவிலிருந்து மாட்டிறைச்சி
ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
ஈக்குவடாரின்
அதிபர் லெனின் மொரெனோ, அதிகாபூர்வ அறிக்கையில் தெரிவித்திருப்பதை விட
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருப்பதாக நினைப்பதாக கூறியுள்ளார்.
இதுவரை
அந்த நாட்டில் 3000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 120 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரபூர்வ தகவல்கள்
தெரிவிக்கிறது. அங்கு இரண்டாவது பெரிய நகரமான குவாயகீலில் சாலையில்
இறந்தவரின் சடலத்தை விடும் புகைப்படம் பகிரப்பட்ட பின்னர் இவ்வாறு
கூறப்படுகிறது. BBC

0 comments:
Post a Comment