• Latest News

    April 03, 2020

    நற்பிட்டிமுனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு.

    (ஏ.எல்.எம்.ஷினாஸ்)   
    நற்பிட்டிமுனை மென்ஸ் (MANS) சமூக சேவைகள் அமைப்பின் அனர்த்த நிவாரண சேவைகள் செயலணி ஏற்பாடு செய்த தற்போதைய அசாதரண சூழல் காரணமாக நாளாந்த தொழிலை இழந்த குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (03.04.2020) நடைபெற்றது.

    பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், அமைப்பின் செயலணித் தலைவர் ஜெ.எம்.மிஹ்லார், தவிசாளர் ஏ.எச்.எச்.எம்.நபார் மற்றும் இராணுவத்தினர் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த நிவாரண பொதிகளை வழங்கிவைத்தனர்.

    கணவனை இழந்த தாய்மார், அங்கவீனமுற்றோர், முதியோர்கள் என 450 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்படவுளது என அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.



     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நற்பிட்டிமுனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கிவைப்பு. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top