இங்கிலாந்து கிரிக்கட் அணியின் அனைத்து துறை ஆட்டக்காரர் மோயின் கானுக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் மருத்துவக்குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் இங்கிலாந்து கிரிக்கட் அணியுடன் இணைந்துக்கொண்டார்.ஏற்கனவே, அவர் பிரித்தானியாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment