பாராளுமன்ற பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறுகளில் 4 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சிலருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளிலேயே மேற்படி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.January 17, 2021
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment