S.B.அக்தர் -
பாடசாலையின் சுகாதாரத்தில் அதிகூடிய கவனத்தை செலுத்திய ஒருவராக இருக்கின்றார். பாடசாலைகளுக்கு அடிக்கடி விஜயங்களை மேற்கொண்டவர். சுகாதாரத்தை பொறுத்த வரை மாணவர்கள் விரும்பக் கூடிய சூழலை உருவாக்குவதற்கு காரணமாக இருந்துள்ளார். அவரது சேவையை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவ்வாறு கல்முனை வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.சாஜித் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,நிந்தவூர்
பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியாக சுமார் 08 வருடங்கள்
கடமையாற்றிய திருமதி தஸ்லீமா பசீர் தமது கடமையை செய்வதற்கு ஒத்துழைப்பு
வழங்கிய நிறுவனங்கள், பொது அமைப்புக்கள்,
ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.சாஜித் மேற்கண்டவாறு தெரிவித்தார்
ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.சாஜித் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி என்பதற்கு அப்பால் இந்த ஊரின் மீது நேசம் கொண்டவராக செயற்பட்டார். அவர் எங்களை விட்டு இடமாற்றம் பெற்றுச் செல்லுவதென்பது கவலைக்குரியதாகவே இருக்கின்றது.
பாடசாலைகளின் சுகாதார மேம்பாட்டிற்கு அதிகம் சேவை செய்தவர் என்றடிப்படையில் பாடசாலைகளின் சார்பில் பாராட்டுகின்றேன். கொரோனா, டெங்கு போன்றவற்றில் கரிசனையுடன் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment