நிந்தவூரின் பொதுச் சுகாதாரத்திற்கு அளப்பரிய பங்காற்றிய ஒருவராக திருமதி டாக்டர் தஸ்லிமா பசீர் விளங்குகிறார். அவர் இடமாற்றம் பெற்றுச் செல்லுவதென்பது எங்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சிக்குரிய விடயமாக அமையவில்லை. மக்களின் அடிப்படை சுகாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் இரவு , பகல் பாராது அயராது உழைத்துள்ளார்.
இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியாக சுமார் 08 வருடங்கள் கடமையாற்றிய திருமதி தஸ்லீமா பசீர் தமது கடமையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நிறுவனங்கள், பொது அமைப்புக்கள்,
ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே தவிசாளர் தாஹீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர்
ஒரு பெண்ணாக இருந்தாலும் தமது கடமையுணர்வில் பின்நிற்கவில்லை. ஒரு
இரும்புப் பெண்மணி போன்று நிந்தவூர் பொதுச் சுகாதராத்தை மேம்படுத்துவதில்
கடுமையாக உழைத்தார். அந்த வகையில் அவரின் சேவையை நிந்தவூர் மக்களின்
பிரதிநிதி என்ற அடிப்படையில் நிந்தவூர் மக்கள் சார்பாக எனது நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றேன்.பாடசாலைகள் முதல் வீடுகள், வீதிகள் வரை நேரடி விஜயம் சென்று உரிய நடவடிக்கைகளை எடுத்தார். இந்தப் பிரதேசத்தில் டெங்குவை ஒழிப்பதற்கு நிந்தவூர் பிரதேச சபையின் உதவியை அடிக்கடி வேண்டிக் கொண்டார். நாங்களும் அவரது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தோம். தற்போதைய கொவிட் பிரச்சினையின் போது கூட இரவு 12 மணிவரை மக்களின் சுகாதாரத்திற்காக கடமையாற்றியுள்ளார். இத்தகைய உயரிய சேவையை சுமார் 8 வருடங்களாக எமது பிரதேசத்திற்கு வழங்கியமைக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, அவர் எங்கு சென்று சென்றாலும் உயர்நிலையை அடைய வேண்டுமென்று பிராத்திப்பதோடு, அவரது கடமைக்கு உறுதுமையாக செயற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதக உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலகத்தின் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நிகழ்வில் வைத்தியர் திருமதி தஸ்லிமா பசீரின் சேவையை பாராட்டி நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசும் வழங்கினார்.












0 comments:
Post a Comment