ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாக வலுப்படுத்துவது முக்கியமானது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அனைத்து வகையிலும் வலுப்படுத்துவது முக்கியம்.
அரசியல் ரீதியாக வலுப்படுத்துவது முக்கியமானது. நாங்கள் அரசியலில் பல புயல்களை எதிர்நோக்கியவர்கள்.நான் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து போதும், அதில் இருந்து வெளியேற நேரிட்டதுமே பெரிய புயல்.
ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் புயலை எதிர்நோக்கினோம்.
இதனால், புயல்களுக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை. புயல்களால் எங்களை அச்சுறுத்தவும் முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment