நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாளை முதல் இராணுவ வைத்தியசாலையில் கோவிட் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில், நாளை முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொள்ள முடியும் என அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய மேல் மாகாணத்தில் ஆபத்தான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் மக்களுடன் அதிகளவில் கலக்கும் தரப்பினரை இலக்கு வைத்து தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இன்று முதல் கோவிட் தடுப்பூசியை மக்களுக்கு வழங்க அனுமதி கிடைத்துள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதனை வழங்குவது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து வருவதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment