தாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதில்லை எனவும், அரசாங்கம் தம்மைக் கைவிட்டு விடுமோ என்பது தெரியவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பதற்றமடைந்து தீர்மானங்களை எடுக்க முடியாது. தற்போதைய அரசாங்கத்தைப் பிரச்சினையின்றி முன்னோக்கி அழைத்துச் செல்வதே எமது நோக்கமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
கேள்வி: நீங்கள் தொடர்ந்தும் பொறுமையுடன் இருக்கப் போகின்றீர்களா?
விமல் வீரவன்ச : ஏன் நான் பொறுமை காக்கக்கூடாதா?
கேள்வி: உங்களை பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லவா தாக்குகின்றனர்?
விமல் வீரவன்ச: நான் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறை சொல்ல மாட்டேன். அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை யாரே வழிநடத்துகின்றனர். அந்த வழிநடத்துபவரே இந்த உறுப்பினர்களை நிர்க்கதியாக்கியுள்ளார்.
கேள்வி: தேசிய சொத்துக்கள் விற்பனை செய்வதை நீங்கள் எதிர்ப்பதனாலா இந்த சர்ச்சை?
விமல் வீரவன்ச: அநேகமாக இருக்கலாம்
கேள்வி: நீங்கள் நாட்டின் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதற்குக் குரல் கொடுப்பீர்களா?
விமல் வீரவன்ச: அதனை நான் அரசியல் தொடங்கிய காலம் முதல் இதுவரையில் செய்து வருகின்றேன்.
கேள்வி: அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிக்க முடியுமா?
விமல் வீரவன்ச : நான் அரசாங்கத்தை விட்டு விலக மாட்டேன், ஆனால் அரசாங்கம் என்னைக் கைவிட்டு விடுமா தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment