பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை 4 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததார்.
இலங்கை வந்த பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமரான இம்ரான் கானை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்டக்குழுவினர் வரவேற்றனர்.இந்நிலையில் தற்போது அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்குமிடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.
பாகிஸ்தான் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சர்கள் உள்ளிட்ட தூதுக்குழு பாகிஸ்தான் பிரதமருடன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
இதையடுத்து ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பை இருவரும் மேற்கொள்ளவுள்ளனர்.
0 comments:
Post a Comment