கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஷானி அபேசேகர என்பவர் நேர்மையான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர். இந்த நேர்மையான அரச ஊழியருக்கு பின்னால் ஒருவர் துரத்தி செல்கிறார்.
குறிப்பாக நந்தசேன கோட்டாபய ராஜபக்ச, பதவிக்கு வந்த நாளில் இருந்து ஷானி அபேசேகர என்ற நபர் மீது கோபம் கொண்டு செயற்பட்டு வருகிறார். இதனை எம்மால் காணக் கூடியதாக இருக்கின்றது.
ஷானி அபேசேகர முதலில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் செயலாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஷானி அபேசேகர என்ற அதிகாரி நேர்மையான புகழ்பெற்ற அதிகாரி. நாட்டில் நடந்த அனைத்து சம்பங்கள் குறித்தும் நேர்மையான விசாரணைகளை நடத்தியவர்.
ஷானி அபேசேகர மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து சிறையில் அடைத்தனர். அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஷானி அபேசேகர மீதுள்ள கோபம் என்ன?. இந்த அதிகாரி எமது அரசாங்கத்தின் காலத்திலும் எந்த அரசியல்வாதிக்கும் அடிப்பணியாது கடமையாற்றினார்.
அவர் செய்த விசாரணைகள் காரணமாக ஆத்திரமடைந்துள்ள கோட்டாபய ராஜபக்ச அந்த ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதையே காண முடிகிறது எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
Thanks: Tamilwin.com
0 comments:
Post a Comment