நேற்று (14.08.2021) காலையில் நிந்தவூர் கோயில் வீதியில் உள்ள வடிகானுக்கு மேல் போடப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்புக்கம்பியால் செய்யப்பட்ட மூடியை இனந் தெரியாத நபர்கள் முச்சக்கரவண்டியில் வந்து எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.
இதனை அவதானித்த பொது மக்கள் அவர்களை அணுகிய போது முச்சக்கர வண்டியை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
இது பற்றி சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கைவிடப்பட்ட முச்சக்கர வண்டியும் பொலிஸாரின் கணகாணிப்பில் உள்ளது.
0 comments:
Post a Comment