• Latest News

    August 12, 2021

    இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் புதிய எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

    இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் இணை நிறுவனமாக புதிய நிறுவனத்தை ஆரம்பித்து அதன் ஊடாக சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க  எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது.

    இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தற்போது தயாரிக்கும் இலங்கையின் எரிவாயுவில் 5 சத வீதம் லிட்ரோ மற்றும் லாஃப் கேஸ் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.

    இதனிடையே இலங்கை வரலாற்றில் பாரிய முதலீடாக புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நிர்மாணிக்கும் பணிகளை எரிசக்தி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

    இந்த நிர்மாணிப்பு பணிகள் முடிந்த பின்னர் தேசிய எரிவாயு தேவையில் 20 வீதத்தை உற்பத்தி செய்யும் இயலுமை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்கும்.

    புதிய எரிவாயு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், போட்டியான விலையில் சந்தைக்கு எரிவாயுவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் புதிய எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்க நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top