நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் ,எமது சங்கம்
சுட்டிக்காட்டியபடி கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசாங்கம்
முன்னெடுக் காமையே என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
ஆரம்பத்திலிருந்தே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டிய படி கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசாங்கம் சரியான முறையை முன்னெ டுக்காமையால் கொரோனா தொற்றால் அதிகமானோர் மரணிக்க ஏதுவாக அமைந்துள்ளதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சரியான திட்டம் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் குறித்த செயற்றிட்டத்தைப் பின்பற்றத் தவறியமையால் தான் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் வைத்தியர் நவிந்த சொய்ஸா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது சங்கம் சுட்டிக்காட்டியபடி 60 வயதுக்கு மேற்பட்ட (2.7
மில்லியன்) வயோதிபர்களுக்கும், 60 வயதுக்குக் குறைவான தொற்றல்லா நோய்கள்
மற்றும் தேசிய பொருளாதார நிலைமை தன்மைக்கு ஏற்ற குழுவினர் களுக்கு 10
மில்லியன் கொரோனா தடுப்பூசியில் 5 மில்லியன் செலுத்தியிருக்க வேண்டும்
என்றும் 100 க்கு 20 சதவீதமானோருக்கு சரியான முறையில் செலுத்தி யிருந்தால்
90 சதவீதமான மரணங்களைத் தவிர்த்திருக் கலாம் எனவும் வைத்தியர் நவிந்த
சொய்ஸா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment