• Latest News

    September 06, 2021

    ஹிஷாலி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் இன்று நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டார்

    தமது வீட்டில் பணியாற்றிவந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று -06- கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். 

    சிறுமி ஹிஷாலினி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஏற்கனவே சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகிய நால்வரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில், பிறிதொரு வழக்கில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இவ்வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹிஷாலி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் இன்று நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top