• Latest News

    September 11, 2021

    இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளின்படி, அரசியல்வாதி ஒருவர் ஆளுநராகச் செயற்பட முடியாது - எரான் விக்ரமரத்ன

    இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளின்படி, அரசியல் வாதி ஒருவர் ஆளுநராகச் செயற்பட முடியாது, என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தியிருக்கின்றார்.

    மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படத் தயாராகவுள்ளார் என வெளியான செய்திகள் தொடர்பாக  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    தனது பதவியிலிருந்து முன்கூட்டியே ஓய்வு பெறத் தீர்மானித் துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் நேற்யை தினம் வெளியிட்ட விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில வாரங்களாக மனதை நெருடும்  சம்பவங்கள் இடம்பெற்றமை இதற்குக் காரணம் என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட இருப்பதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் பதவி விலகிய பின்னர் குறிப்பிட்ட சில நாட்கள் வரை அவர்கள் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்க வாய்ப்பில்லை என நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளின்படி, அரசியல்வாதி ஒருவர் ஆளுநராகச் செயற்பட முடியாது - எரான் விக்ரமரத்ன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top