இலங்கையில்
உள்ளாடைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்ற பொறுப்பை வர்த்தக அமைச்சர் என்ற
அடிப்படையில் தான் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன
தெரிவித்துள்ளார்.
ஆடை உற்பத்தியாளர்கள் சிலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டில் தேவை ஏற்படும் எந்த ஒரு நபருக்கும், எந்த ஒரு தரத்திலும் உள்ளாடை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் நான் தயார்.
உள்ளாடைகள் அதிகம் கையிருப்பில் உள்ளன. இலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இதுவரை உள்ளாடைக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.
எதிர்காலத்தில் தேவைப்படும் நபர்களுக்கு அதனை குறைந்த விலையில் சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ibc
0 comments:
Post a Comment