• Latest News

    February 26, 2022

    3இ500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவிப்பு

    உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து எச்சரித்து வந்த ரஷ்யா, உக்ரைன் மீது வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி போரை தொடங்கியிருந்தது.

    உக்ரைன் - ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளதுடன், பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    இந்நிலையில், உக்ரைன் இராணுவ வீரர்களை போல வேடமிட்டு அவர்களின் சீருடையில் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவத்தினரை சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.

     இதனிடையில் உக்ரைனின் இரண்டு இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷ்ய இராணுவ வீரர்கள், உக்ரைன் இராணுவ சீருடையில் தலைநகர் நோக்கி வேகமாக முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.

    இந்நிலையில் உக்ரைன் இராணுவ வீரர்களை போல வேடமிட்டு அவர்கள் சீருடையில் சென்ற வீரர்கள் தலைநகர் kyivல் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. 

    இதற்கமைய, இதுவரை 3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக, உக்ரைன் இராணுவம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    இந்த படையெடுப்பில் ஈடுபட்ட 3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் ரஷ்ய தரப்பிலான உயிரிழப்புகள் குறித்து இதுவரை ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 3இ500க்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top