கோவிட் வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில், புதிய வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவிட், டெல்டா, ஒமிக்ரோன் உள்ளிட்ட வகைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் இருதய ரத்த நாளங்களை கோவிட் வைரஸ் எப்படியெல்லாம் தாக்கும் என்பது தொடர்பான புதிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் பிரிஸ்டோல் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டுள்ளது.
இருதய ரத்த நாளங்களை கோவிட் வைரஸ் சேதப்படுத்தும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளதுடன், கோவிட் வைரஸ் கிருமி உடலின் பல பகுதிகளை தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதுடன், இது குறித்து ஆய்வும் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment