• Latest News

    February 18, 2022

    நிந்தவூர் பிரதேச தண்ணீர் குளாய் இணைப்பு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது - Shine Lanka தவிசாளர் முஹம்மட் சஹீல் தெரிவிப்பு

    எல்லா புகழும் அழ்ழாஹ்வுக்கே அல் ஹம்துலில்லா நீண்ட காலமாக எமதூரின் பிரதான தண்ணீர் இணைப்புக் குளாய்கள் இடப்படாத காரணத்தினால் எமதூரின்  வீதி அபிவிருத்திகள் மற்றும் மக்களின் தண்ணீர் இணைப்புத் தேவைகள் தடைப்பட்டிருந்தது இது சம்மந்தமாக எமது கெளரவ  தவிசாளர் நண்பர் தாஹீர் அவர்களும் நண்பர் கெளரவ வன்னியார் வட்டார உறுப்பினர் நண்பர் சட்டத்தரணி ரியாஸ் ஆதம்  அவர்களும் என்னிடம் தெரியப்படுத்தியதை அடுத்து மதிப்புக்குரி அமைச்சர் வாசு தேவ நாணயக்கார அவர்களின் மேலான கவனத்துக்கு அமைச்சருடைய இணைப்பு செயலாளர் மதிப்புக்குரிய நண்பர் திலக்சிறி அவர்கள் ஊடாக கொண்டுவந்ததை அடுத்து உடனடியாக வேலைதிட்டத்தை ஆரம்பிப்பதர்க்காக பிராந்திய முகாமையாளரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

     மதிப்புக்குரிய பொறியிளார் நஸீர் அவர்களின் நெறிப்படுத்தலில் இன்று 18.02.2022 காலை நிந்தவூர் நீர் வளங்கள் அதிகார சபையின் பொறுப்பாளர் அவர்களை சந்தித்து பேசக் கிடைத்தது. இதற்க்கமைய வருகின்ற நாட்களில்  வேலைளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.

    இந்த வேலை திட்டத்தை நடைமுறைபடுத்த உதவிய Hon Minister Vasu Devananayakara and Co se Tilaksiri ,Hon chairman Asraf thair Hon Riyas atham RM water Board and Engineers and staff of water board   என்னுடன் அமைச்சுக்கு சமூகளித்திருந்த சகோதர் Farook அவர்களுக்கும் எனது மற்றும் எனது ஊர் மக்களின் மனமார்ந்த நன்றிகளை தெரவித்துக்கொள்கின்றேன்.

    இன்ஷா அழ்ழாஹ் கட்சி பேதங்களை மறந்து எல்லா விடயங்களிலும் நாம் எல்லோரும் ஒன்று பட்டு செயற்பட்டால் நிச்சயமாக எமது ஊரை சகல பிரச்சினைகளிலும் இருந்து விடுவித்து சிறப்பான வளமான எதிர்காலத்தை எமது சந்ததினர்களுக்கு  ஏற்படுத்தலாம். அல் ஹம்துலில்லாஹ்.



     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் பிரதேச தண்ணீர் குளாய் இணைப்பு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது - Shine Lanka தவிசாளர் முஹம்மட் சஹீல் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top