• Latest News

    May 12, 2023

    பாடசாலை சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி விருதுகளைப் பெற்று நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை வரலாற்றுச் சாதனை!

    பண்டார நாயக்க சர்வதேச மண்டபத்தில் (BMICH) அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுற்றாடல் முன்னோடி விருது வழங்கும் விழா இன்று 11ஆம் திகதி நடைபெற்றது.

    இவ்விழாவில் சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
    இவ்விழாவில் நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலை மாணவிகள் 11 பேர் சுற்றாடல் முன்னோடிக்கான ஜனாதிபதி விருதினை பெற்றுக் கொண்டனர்.

    கிழக்கு மாகாணத்தில் ஒரு பாடசாலையில் இருந்து அதிக (11) விருதுகளைப் பெற்ற முதல் பாடசாலையாக இப்பாடசாலை சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இதேவேளை நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையில் இருந்து 11 மாணவிகள் இவ்விருதினைப் பெற்றுக் கொள்வதற்கு வழிகாட்டிய பாடசாலையின் சுற்றாடல் பொறுப்பாசிரியரும் நிந்தவூர் கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் திருமதி ஹிதாயா ஷபீக் விஷேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

    இச்சாதனையை படைப்பதற்கு காரணமாக திகழ்ந்த பொறுப்பாசிரியர், சுற்றாடல் கழகத்தின் ஏனைய ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர்களுக்கும், சுற்றாடலுக்கு பொறுப்பாக செயற்படும் கல்முனை வலய பொறுப்பாளர்களுக்கும் பாடசாலையின் அதிபர் தேசமானிய ஏ.எல்.நிஸாமுதீன் தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றார்.

    இதேவேளை நிந்தவூர் அல் - அஷ்றக் தேசிய மகாவித்தியாலயத்தை (தேசிய பாடசாலை) 02 மாணவர்கள் சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி விருதினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

    சஹாப்தீன் -
    11.5.2023




     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாடசாலை சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி விருதுகளைப் பெற்று நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை வரலாற்றுச் சாதனை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top