• Latest News

    May 04, 2023

    நிதி முகாமைத்துவ டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்

     (அபு அலா)

    UNDP அனுசரணையில் அமுல்படுத்தப்படும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் திறன் விருத்தி செயற்திட்ட (CDLG) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 6 மாதகால நிதி முகாமைத்துவ டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் விழா நேற்று (02) திருகோணமலை ஹிந்து கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

    APFA ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் வி.கணகசபாவதி தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.


    மேலும், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்னாயக்க, ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க, பிரதிப் பிரதம செயலாளர்களான (நிர்வாகம்) ஆ.மன்சூர், ஆளணி மற்றும் பயிற்சி (திருமதி) ஆர்.யு.அப்துல் ஜலீல், சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முதளிதரன், விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா, சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், கிராமிய கைத்தொழில் திணைக்கள மாகாண பணிப்பாளர் (திருமதி) யு.கவிதா உள்ளிட்ட மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள், மாகாண ஆணையாளர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


    கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களிடம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி முகாமைத்துவம் தொடர்பான 6 மாதகால டிப்ளோமா பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டதற்கமைவாக, அதில் தெரிவு செய்யப்பட்டவர்களில் 56 பேர் குறித்த பயிற்சி நெறியை முழுமையாக நிறைவு செய்திருந்தனர். அவர்களுக்கான சான்றிதழ்களை இன்றைய விழாவின் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.


    குறிப்பாக, உள்ளூராட்சி நிதி முகாமைத்துவ டிப்ளோமா பயிற்சி நெறியில் அதி சிறப்பு தேர்ச்சிபெற்று சாதனை படைத்த அக்கரைப்பற்று மாநகர சபையின் செயலாளர் ஏ.எம்.ஹபீபுர் ரஹ்மான் மற்றும் க.கருணாகரன் ஆகியோருக்கு பிரதம அதிதி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் பாராட்டப்பட்டு அவர்களுக்கான ஞாபகச் சின்னம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.  






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிதி முகாமைத்துவ டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top