எம்.எஸ் - பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீண்டும் துபாய் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த 23ஆம் திகதி செவ்வாயக்கிழமை கடந்த செவ்வாய்க்கிழமை துபாயில் இருந்து நாடு திரும்பிய அவர், இலங்கை பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் ஓய்வு அறையில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் போது அவரிடமிருந்து இதன்போது 3.5 கிலோ தங்கத்துடன் 91 ஸ்மார்ட் கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு கைது செய்யப்பட்டு அபராதம் செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமை பதவியில் இருந்து நீக்கும் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது. அதற்கு அமைவாக அவர் தாமாக பதவியிலிருந்து விலக வேண்டுமென்று கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எதிர்க்கட்சியில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமுக்கு எதிராக முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டி சபாநாயகரிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளனர். இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நேற்று இரவு 8 மணியளவில் எம்பி ஃப்ளை துபாய் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. எனினும் அவரின் பயண நோக்கம் குறித்து தகவல்கள் தெரியவரவில்லை.

0 comments:
Post a Comment