• Latest News

    May 27, 2023

    கிழக்கு ஆளுநரின் கருத் திட்டம்: கல்முனையில் கடற்கரை சுத்திகரிப்பு வேலைத் திட்டம்

    கிழக்கு மாகாணத்திலுள்ள கடற்கரை பிரதேசங்களை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தும் பொருட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் விஷேட கருத் திட்டத்திற்கமைவாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று சனிக்கிழமை (27)  சுத்திகரிப்பு வேலைத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில், மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் அவர்களின் தலைமையில் பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    கல்முனை வாடிவீட்டு வீதி கடற்கரைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது, மருதமுனை, பெரிய நீலாவணை மற்றும் பாண்டிருப்பு கடற்கரைப் பகுதிகளும் சிரமதானம் செய்யப்பட்டு, கழிவுகள் யாவும் அகற்றப்பட்டு, சுத்தமாக்கப்பட்டுள்ளன.
    இப்பணிகளில் சுகாதார மற்றும் பொறியியல் வேலைப் பிரிவுகளின் மேற்பார்வையாளர்களும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.
    நகரையும் சுற்றுச்சூழலையும் தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருப்பதன் ஊடாக சுற்றுலாப் பயணிகளை கவரும் நகராகவும் டெங்கு அற்ற பிரதேசமாகவும் கல்முனை மாநகரை நிலைப்படுத்தும் பொருட்டு கடற்கரைப் பகுதிகளிலும் பிரதான வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களிலும்  முன்னுரிமை அடிப்படையில் தொடர்ந்தேச்சியாக கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் தெரிவித்தார்.








    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு ஆளுநரின் கருத் திட்டம்: கல்முனையில் கடற்கரை சுத்திகரிப்பு வேலைத் திட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top