• Latest News

    May 30, 2023

    கல்முனை விவகாரம் மற்றும் முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கல்முனையில் கலந்துரையாடல் !

     (நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர்)

    இலங்கை முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மக்களுக்கு முன்வைத்தலுக்காகவும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலுமான கலந்துரையாடல் ஒன்று கல்முனை உரிமைக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சமாதான கற்கைகளுக்கான நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் எஸ்.எல்.றியாஸ் தலைமையில் நேற்று (29) இரவு கல்முனை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இந் நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள கல்முனை விவகாரத்தில் இடையீட்டு மனுதாரர்களாக தாங்கள் செல்லவேண்டிய அவசியம் குறித்தும், அந்த வழக்கில் முஸ்லிங்களுக்கு இருந்த ஆபத்து தொடர்பிலும் மக்களுக்கு விளக்கமளித்தனர். 

    கல்முனை முஹைத்தீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ், அரசியல்துறை பேராசிரியரும், தென் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சாரபீடாதிபதியான எம்.எம்.பாஸீல் ஆகியோர் முஸ்லிங்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பிலும், கல்முனை விவகாரம் தொடர்பிலும் முஸ்லிங்களின் நிலைப்பாடுகள் தொடர்பிலும், அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களும் முன்னெடுக்கவேண்டிய பணிகள் தொடர்பிலும் பேசினர். இந்த கலந்துரையாடலில் உலமாக்கள், தென் கிழக்கு பல்கலைக்கழக பல்கலைக்கழக சீரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.எம் இர்சாத், வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர்  இஸட்.ஏ. அஸ்மீர், சட்டமாணவன் எம்.வை.எம்.வை. இம்ரான், கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ஏ.ஜே ஜெளஸி, முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நிஸார் ஜே.பி, சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், வர்த்தகர்கள், சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

    இந்த கலந்துரையாடலின் போது முஸ்லிம் சமூகத்தின் கடந்த கால வரலாறுகள் மீட்கப்பட்டதுடன், எதிர்கால விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது.








    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை விவகாரம் மற்றும் முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கல்முனையில் கலந்துரையாடல் ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top