• Latest News

    June 01, 2023

    இலங்கையில் 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு

    இலங்கையில் தற்போது 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

    குறித்த விடயத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மூன்று மாதங்களுக்கு முன்னர் நாட்டில் சுமார் 200 பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்தது வந்துள்ளது.

    தற்போது அது 112 ஆகக் குறைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது 70 ஆகக் குறையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் மருந்துகளுக்கான தட்டுப்பாடு குறைந்துள்ளது: அமைச்சர் தகவல் | Shortage Of Medicines In Sri Lanka
    போதிய நிதி உள்ளதா...!

    மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரம்புக்வெல்ல, கடந்த ஆண்டை விட பொருளாதார நிலை சீரடைந்துள்ளது.

    எனினும் நிதியை விடுவிப்பதில் சிறுசிறு சிக்கல்கள் உள்ளன என்றும் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கையில் 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top