சஹாப்தீன் - கல்முனை கல்வி வலய பாடசாலைகளின் மாணவர்கள் 2022ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை பல்வேறு சாதனைகளை மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் சாதனை படைத்த வீரர்களை பாராட்டிக் கௌரவித்து நினைவுச் சின்னஙகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
கல்முனை கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.சாஜித் தலைமையில் நடைபெற்ற இப்பாராட்டு பெருவிழா நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலையின் காசிமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் உட்பட கல்வி அதிகாரிகள் பாடசாலைகளின் அதிபர்கள், அனுசரணையாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த கௌரவிப்பு விழாவில் 2022ஆம் ஆண்டு தேசிய மட்டத்திலும், 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்களைப் பெற்ற 42 வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் தேசிய மட்டத்தில் சாரணராக சாதனை படைத்து ஜனாதிபதி விருதினைப் பெற்றவராவார்.
மாகாண மட்டத்தில் 285 நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி 259 பேர் பதக்கம் பெற்றிருந்தனர். அவர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டார்கள்.
அத்தோடு விளையாட்டுத்துறையில் கல்முனை வலயம் சாதனை படைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.சாஜித் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். மேலும், விளையாட்டுத்துறைக்கு பெரும் சேவையாற்றி ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எம்.இப்றாகிம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் ஆகியோர்களும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

.jpeg)


.jpeg)








.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)




0 comments:
Post a Comment