ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் அனுபவிக்கும் காணிப்பிரச்சனைகள், அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட பல கவலைக்குரிய விடயங்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (08) மாலை நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment