நாட்டு மக்களுக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கட்டானை கொச்சிக்கடை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித் ஆண்டகை இதனை தெரிவித்தார்.
இதேவேளை, நீதியை அநீதியாக மாற்றவும், ஆட்சியை சர்வாதிகாரமாக்கவும், சட்டத்தை மாற்றி சமூகத்தை வழிநடத்தவும் இன்றைய தலைவர்கள் கைகோர்த்து செயற்படுவதாகவும் அத்தகையவர்களை வெளியேற்றுவதற்கு அனைவரும் தயாராக வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் வலியுறுத்தினார்.
மேலும், இவ்வாறான ஆட்சியாளர்கள் நாட்டை ஆள தகுதியற்றவர்கள் எனவும் அவர்களை வெளியேற்றுவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment