(ஏயெஸ் மெளலானா)
எமது
நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற்று, மக்கள் அனைவரது
வாழ்விலும் சுபீட்சம் மலர இப்புனிதத் திருநாளில் வல்ல இறைவனை
பிராத்திப்போம் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவரும்
ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களுக்கான
ஒருங்கிணைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
எமது
கடந்த சில வருட பெருநாள்கள் கொரோனா தொற்று அபாயத்திற்கு மத்தியிலும்
எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான பாரிய தட்டுப்பாடுகளுக்கு
மத்தியிலும் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்திருந்த சூழ்நிலையிலும்
கடந்து சென்றிருந்ததை எண்ணிப் பார்க்கிறோம். இறைவன் அருளால் தற்போது அந்த
அவலநிலை நீங்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள தருணத்தில் இப்பெருநாளை
மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றோம்.
எவ்வாறாயினும்
எமது நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து முற்றாக மீட்சி பெற வேண்டும்.
இதன் மூலம் எமது நாட்டு மக்கள் அனைவரது கஷ்டங்களும் முழுமையாக நீங்கி,
நிம்மதியான சூழ்நிலைக்குத் திரும்ப வேண்டும். தேச நலன் கருதிய
செயற்பாடுகளுக்கு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒத்துழைப்பு வழங்குவதன்
மூலமே இந்த இலக்கினை அடைந்து கொள்ள முடியும்.
மேலும்,
இன, மத, பிரதேச பேதங்களைக் களைந்து நாம் அனைவரும் இலங்கையர் என்கிற
கொடியின் கீழ் ஒன்றிணைவதன் ஊடாகவே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்கிற
யதார்த்தங்களை உணர்ந்து செயற்படுவோமாக.
அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.
0 comments:
Post a Comment