• Latest News

    June 29, 2023

    அனைத்து சவால்களையும் தியாக சிந்தையோடு எதிர்கொள்வோம்; மு.கா. பதில் பொருளாளர் ஏ.சி.யஹியாகான்

     (ஏயெஸ் மெளலானா)

    உலக வாழ் முஸ்லிம்களின் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி அனைத்து சவால்களையும் தியாக சிந்தையோடு எதிர்கொள்ளும் ஆற்றலை அல்லாஹ் வழங்க வேண்டுமென இன்றைய ஈதுழ் அழ்ஹா பெருநாள் தினத்தன்று பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதில் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

    இறைதூதர்களான நபி இப்ராஹிம் (அலை), நபி இஸ்மாயில் (அலை), அன்னை ஹாஜரா ஆகியோரின் தியாகத்தை பிரதிபலிக்கும் ஹஜ் கடமை என்பது  தியாகத்தையும் சகிப்புதன்மையையும் அதிகம் வலியுறுத்தும் இறுதிக் கடமையாகும்.

    இலங்கை முஸ்லிம்கள் - இந்த நாட்டிற்காக ஆற்றிய அனைத்து வகையான தியாகங்களும் போற்றுதலுக்குரியது.

    இந்த வருடம் குர்பானி கொடுப்பதில் சில இடங்களில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தியாகத்தை வலியுறுத்தும் இந்நாளில் தியாகத்தையும் சகிப்புத் தன்மையையும் கடைப்பிடித்து இப்பெருநாளை கொண்டாடுவோம். உலகவாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். ஈத்முபாரக்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அனைத்து சவால்களையும் தியாக சிந்தையோடு எதிர்கொள்வோம்; மு.கா. பதில் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top