• Latest News

    April 08, 2024

    இன்று முழு சூரிய கிரகணம்! அடர்ந்த இருட்டு ஏற்படும்!!

    உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம் ( Total Solar Eclipse) தென்படவுள்ளது.

    இந்த அரிய நிகழ்வானது கனடா, 15 அமெரிக்க மாநிலங்கள், மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் 4 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் வரை நீடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முழு சூரிய கிரகணம் என்பது மிகவும் அரிதான விடயம் என நாசா(NASA) தெரிவித்துள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, ​​ சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து பூமியின் மீது நிழல் படும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

    இந்த நிகழ்வின் போது, ​​சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.  இதன்போது, சூரியனின் ஒளியை நிலவு பூமியின் சில பகுதிகளில் விழுவதைத் தடுக்கிறது.

     இதனால், முழு சூரிய கிரகணத்தின் போது சிலப் பகுதிகளில் சூரிய ஒளிபடாமல் அடர்ந்த இருட்டு ஏற்படும். அடுத்த முறை வட அமெரிக்கர்கள் இது போன்ற முழு சூரிய கிரகணத்தை 2044 இல் பார்ப்பார்கள் என்று நாசா கூறுகிறது.

    இதற்கிடையில், முழு கிரகணத்தை பார்க்கும்போது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், சிறப்பு கிரகண கண்ணாடிகளை அணியுமாறும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்று முழு சூரிய கிரகணம்! அடர்ந்த இருட்டு ஏற்படும்!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top