• Latest News

    May 29, 2024

    2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே 31 இல் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த

     

    2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

    அதன்படி மே மாதம் 31 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

    2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில், பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

    அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,531 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே 31 இல் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top