• Latest News

    July 26, 2024

    ஜனாதிபதி ரணில் பதவி விலக வேண்டும்!

     உயர் நீதிமன்ற உத்தரவின்படி பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாவிட்டால் பதவி விலகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சவால் விடுத்துள்ளார்.


    உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவை ஜனாதிபதி உறுதி செய்து, பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க வேண்டும் என சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (26.07.2024) கோரிக்கை விடுத்தார். 

    மேலும் அவர், "பொலிஸ் மா அதிபர் குறித்த பிரச்சினையில் இருந்து ஜனாதிபதி தப்ப முடியாது. இன்றும் அவர்தான் ஜனாதிபதி. அவர் ஜனாதிபதி வேட்பாளராக வந்தாலும் அவரது பொறுப்புகளில் இருந்து விலக முடியாது.பொலிஸ் மா அதிபர் இல்லாத போது, ​​பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது அவரது பொறுப்பு. அதைச் செய்ய முடியாவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.

    இந்த நிலையில், ஜனாதிபதி அரசியல் சாசனத்துக்கு விரோதமான செயலில் ஈடுபட முயற்சிக்கிறார்” என குற்றம் சுமத்தியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி ரணில் பதவி விலக வேண்டும்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top