• Latest News

    July 27, 2024

    பதில் பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய முன்னுதாரணங்கள் உள்ளன - சட்டத்தரணி பவானி பொன்சேகா

     


    இலங்கை  பொலிஸ்மா அதிபரின் பதவி வெற்றிடமாகவில்லை பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியாது என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்திருப்பது, ஜனாதிபதி தேர்தலிற்கு முன்பாக விடயங்கள் எவ்வாறு அரங்கேறப்போகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக மனித உரிமை சட்டத்தரணி பவானி பொன்சேகா தெரிவித்துள்ளார்.

    அதோடு இலங்கையில் கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலை பதில் பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையில் நடத்திய முன்னுதாரணங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அதிகாரத்தில் தொடர்ந்தும் நீடிப்பதற்காக ஜனநாயகத்தை செயல் இழக்கச் செய்வதில் தொடர்ந்தும் ஈடுபடும் ஒருவருக்கு ஏற்பட்ட மறதிநோய் என நான் நினைக்கின்றேன் என பவானி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

    அதேவேளை நடைமுறை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என பிரதமர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பதில் பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய முன்னுதாரணங்கள் உள்ளன - சட்டத்தரணி பவானி பொன்சேகா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top