முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு பெற்று இருந்ததாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்ற யோசனை கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அரசியல் குழு கூட்டத்தில் முன்வைத்துள்ளார்.எவ்வாறு இருப்பினும் பொதுச் செயலாளரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் 11 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
கட்சித் தகவல்களின்படி குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரைத் தவிர ஏனையோர் வெவ்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என தெரிய வருகிறது.
பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினர் அல்லாத மகர பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் மகள் கூட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறிருப்பினும் பொது ஜன பெரமுனவின் வேட்பாளராக தம்மிக்க பெரேராவின் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அவரது பெயர் குறிப்பிடப்படாமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இது கட்சியின் தீர்மானம் எனவும் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷினி குணவர்தன, சஹான் பிரதீப், ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜே சேகர, பிரசன்ன ராணதுங்க , கன ஹேரத் , மொஹான் பிரியதர்ஷன , ஜானக வக்கும்பர ஆகியோர் பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்க எதிராக வாக்களித்துள்ளனர்.
.


0 comments:
Post a Comment