• Latest News

    October 06, 2024

    முன்னாள் அமைச்சரின் மைத்துனரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 07 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் கண்டுபிடிப்பு

    மேல்மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவரின் மைத்துனரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ஏழு கோடி ரூபா பெறுமதியான போலி இலக்கத் தகடு கொண்ட சொகுசு வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    லுணுகல பிரதேசத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையமொன்றை சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பதுளைப் பிரிவு குற்றப்புலனாய்வு  பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

    குறித்த சொகுசு வாகனத்தில் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான காரின் பதிவு இலக்கம் இணைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    பதுளை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல அவர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பதுளைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜானக உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் வாகனத்தை கண்டுபிடித்துள்ளனர்.

    இதனையடுத்து பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட சொகுசு வாகனம் முன்னாள் அமைச்சரின் மைத்துனரால் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முன்னாள் அமைச்சரின் மைத்துனரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 07 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் கண்டுபிடிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top